×

பாகிஸ்தான் முன்னிலை: ஷகீல் 208* ரன் விளாசல்

புகாலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ரன் முன்னிலை பெற்றது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312 ரன்னுக்கு (95.2 ஓவர்) ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டிசில்வா 122 ரன், மேத்யூஸ் 64 ரன் விளாசினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் 3 விக்கெட், ஆஹா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்திருந்தது (45 ஓவர்). சவுத் ஷகீல் 69 ரன், ஆஹா சல்மான் 61 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 177 ரன் சேர்த்தது. ஆஹா சல்மான் 83 ரன், நோமன் அலி 25 ரன் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய சவுத் ஷகீல் இரட்டை சதம் விளாசினார். பாகிஸ்தான் 121.2 ஓவரில் 461 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷகீல் 208 ரன்னுடன் (361 பந்து, 19 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட், பிரபாத் ஜெயசூரியா 3, ரஜிதா, விஷ்வா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 149 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்துள்ளது. இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post பாகிஸ்தான் முன்னிலை: ஷகீல் 208* ரன் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Shakeel ,Bukhale ,Sri Lanka ,vlasal ,Dinakaran ,
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்